பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்கள் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு 100 மில்லியனுக்கும் 200 மில்லியனுக்கும்
இடைப்பட்ட ரூபாய்களை செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுயாதீன ஆய்வொன்றின் படி, 72 வேட்பாளர்கள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு மாத்திரம் 50 மில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளனர்.
தேர்தல் ஆய்வு அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன. இவை குறித்த மேலதிக முடிவுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment