யாழ்ப்பாணம் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம்
செய்யப்பட்ட சிறுவன் சுமார் மூன்று மணித்தியால இடைவெளியில்
மரணத்தை தழுவிக் கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது.
பண்டத்தரிப்பு சந்தையை சேர்ந்த சிவனேஸ்வரன் டிலிந்தன் வயது 06 பண்டத்தரிப்பு சிற்றம்பலம் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் உகல்வி கற்கும் மாணவனே மரணம் அடைந்தவராகும்.
கடந்த 17 ம் திகதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 18 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் காய்ச்சல் மாறாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காய்ச்சல் கூடியதைத் தொடர்ந்து 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அவசர அவசரமாக அம்புலன்ஸ் வண்டி மூலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கு உள்ளாக்கிய போதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.
இவருடைய மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரனை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment