August 22, 2015

நாம் எமது கொள்கையில் உறுதியாக நின்று மக்களது வாழ்வாதரத்தை கட்டிஎழுப்ப உழைப்போம்- கஜேந்திரகுமார்!

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு எமது மக்களுக்கு நன்றி தெரிவக்கும் மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் வட்டுக்கோட்டைத் தொகுதியில் குக்கிராமம் ஒன்றில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள் .
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டித்தீர்வே தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கான ஒரே வழியாகும். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவாறு எமது மக்களின் வாழ்வாதார மேம்பாடு கல்வி மேம்பாடு போன்றவற்றிற்காக நாம் அற்பணிப்புடன் உழைப்போம் என்றார்.


No comments:

Post a Comment