August 22, 2015

மன்னாரில் தமிழர் மீது சிங்களவனின் அடக்குமுறை ஆரம்பம் !

மன்னார் திக்கேதீஸ்வரம் பிதான வீதி நாவற்குளம் கிராமத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான வாயல் காணியில் தென்பகுதியைச்
சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான முறையில் மண்  அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவரே இவ்வாறு மண் அகழ்வில் ஈடுபடுவதாகவும் அவர்களுக்கு மன்னார் பொலிஸார் ஆதரவு தெரிவிப்பதாகவும் பிரதேச மகக்ள் தெரிவித்துள்ளனர்.
தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குறித்த  நபர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரச மற்றும் தனியார் காணிகளில் தொடர்ச்சியாக மண் அழல்வில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மற்றும் தென் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக குறித்த நாவற்குளம் கிராமத்திற்குச்  சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் மண் அகழ்வை நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.டிப்பர் வாகனத்தின் சாரதிகளிடமிருந்த மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களில்  மண் அகழ்விற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்து நாவற்குளம் கிராமத்தில் உள்ள குறித்த வயல் காணியில் அகழ்வு செய்யப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளதமாக வடமாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
எனவே மன்னார் பிரதேசச் செயலாளர்இஉரிய திணைக்கள தலைவர்கள் குறிப்பாக பொலிஸார் இவ்விடையத்தில் தலையிட்டு சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வை தடுத்து றிறுத்த வேண்டும் எனவும் குறித்த சட்ட விரோதமண் அகழ்வுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார் .

No comments:

Post a Comment