August 12, 2015

தமிழ்தேசிய அரசியலில் மாற்றத்தை கொண்டுவர இளையவர்களாலேயே முடியும் !தெரிவு செய்யுங்கள்! முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ்தேசிய அரசியலில்  மாற்றத்தை கொண்டுவர இளையவர்களாலேயே முடியும்.அவ்வகையினில் இளம் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தகூடிய
வகையில் 70அகவைகளை அண்டியிருக்கும் தலைமைகளுக்கு ஓய்வுகொடுத்து ‎மாற்றம் ஒன்றை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் நடுநிலைமை வகிப்பது தொடர்பினில் எடுக்கப்பட்ட முடிவையடுத்து கடுமையான அழுத்தங்களிற்கு முதலமைச்சர் உள்ளாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையினில் ஜனநாயகத்தின் முகவரி தேடும் இளையோரின் சங்கமம் பெயரினில் வடகிழக்கிலிருந்து பங்கெடுத்த தமிழ் பேசும் தரப்பினை சேர்ந்த மூவாயிரம் இளைஞர்கள்  தமது ஆதரவை முதலமைச்சரிற்கு தெரிவித்து சந்திபபொன்றை இன்று நடத்தியிருந்தனர்.

அவர்கள் தரப்பினில் சுமார் 25 அம்சங்கள் அடங்கிய மகஜரொன்று முதமைச்சரிடம் அவரது அலுவலகத்தினில் வைத்து கையளிக்கப்பட்டிருந்தது.

சந்திப்பின் பின்னர் தனனிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பினில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டினை ஊடகவியலாளர்களிடையே வெளிப்படுத்தியிருந்தார்.அப்போது எழுப்பபப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் நான் ஏற்கனவே சொன்னது போன்று 70வயது கடந்தவர்களது அரசியலே எம்மிடையே இருக்கின்றது.இளம் சமூகமொன்றே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.அவ்வகையினில் அவர்களை ஆதரிக்க வேண்டுமென தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் முகவரி தேடும் இளையோரின் அமைப்பு பிரதிநிதி கருத்து வெளியிடுகையினில் நடுநிலமை வகிக்கும் முதலமைச்சரிடமே எமது கோரிக்கையினை முதன்முதலாக முன்வைத்துளளோம்.அது அனைத்து தரப்பினையும் சென்றடையுமென நம்புவதுடன் முதலமைச்சரிற்கு ஆதரவை வெளிப்படுத்தியுமிருப்பதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment