August 12, 2015

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இருந்து சாதாரண சட்டத்துக்கு மாற்றம்!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இருந்து சாதாரண சட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

 இன்று இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று சந்தேக நபர்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதன்படி சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சிவகுமார், நிசாந்தன், சந்திரகாசன், ஜெயக்குமார், தவக்குமார் ஆகியோரே இந்த குற்றத்தில் பிரதானமாக செயற்பட்டுள்ளனர்.
ஏனைய நான்கு பேரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேகநபர்கள் ஒன்பதுபேரும் பிணை கோரிய போதும், அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்த வழக்கு இந்த மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment