சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டுப் பயணங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
இன்று வியாழக்கிழமை நீக்கியுள்ளது.
அவன்கார்ட் தனியார் பாதுகாப்பு நிறுவனம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று முற்பகல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
காலி கடற்கரைப் பகுதியில் மிதந்துகொண்டிருந்த நிலையில் ஆயுதக் கப்பலொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணையில் சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரிலேயே இந்த ஆயுதக் களஞ்சியக் கப்பல் இவ்வாறு நங்கூரமிடப்பட்டிருந்ததாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சவின் கடவுச் சீட்டு முடக்கபட்டதோடு, அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment