இலங்கை தமிழரசுக்கட்சியின் துணைத்தலைவராக பேராசிரியர் சிற்றம்பலம் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதுடன் அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் விலகப்போவதாக அறிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில் அவரது பெயர் முன்மொழியப்பட்டிருந்ததுடன் அவருக்கு கட்சி தலைமையினால் நம்பிக்கையும் வழங்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்பார்த்தது போன்றே இறுதி நேரத்தில் அவர் கைவிடப்பட்டு சாந்தி மற்றும் துரைரட்ணசிங்கம் ஆகியோருக்கு அவை வழங்கப்பட்டிடிருந்தன.
முன்னரும் இதே போன்றே ஏமாற்றப்பட்டிருந்த அவர் இம்முறை தனக்கு நிச்சயம் சந்தர்ப்பம் வழங்கப்படுமென்ற நம்பிக்கையில் முரண்பாடுகளை மறந்து ஏனைய வேட்பாளர்களது பிரச்சாரக்கூட்டங்கிளில் பங்கெடுத்திருந்தார். எனினும் மீண்டும் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கவலை கொண்டுள்ள பேராசிரியர் சிற்றம்பலம் தனது பதவியினை ராஜினாமா செய்வதுடன் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவது பற்றியும் தனது ஆதவாளர்களுடன் ஆலோசித்து வருகின்றார்.
இதனிடையே அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை தொடர்பில் கல்வியாளர்கள் குழுவொன்று கவலையும் கண்டனமும் தெரிவித்து ஊடக அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.
தமிழரசுக்கட்சியிலுள்ள தனது போட்டியாளர்களை வடிகட்டும் சுமந்திரனின் ராஜதந்திரத்தில் தற்போது பலியாகும் பேராசிரியர் சிற்றம்பலம் தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினர்களுள் ஒருவரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment