August 15, 2015

சித்தார்த்தனிற்கான பிரச்சார விடயத்தினில் நான் பலியாடாக்கப்பட்டுள்ளேன்! அனந்தி அறிவிப்பு!

சித்தார்த்தனிற்கான பிரச்சார விடயத்தினில் திட்டமிட்ட வகையினில் பலியாடாக்கப்பட்டிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தனை மக்கள் நிராகரிக்க வேண்டுமென ஏற்கனவே விடுத்த ஊடக அறிக்கையினில் தான் அறிவித்ததை அனந்தி நினைவு கூர்ந்துள்ளார்.

குறித்த நிகழ்விற்கு தான் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அது தேர்தல் பரப்புரை கூட்டமாக இருக்குமென தனக்கு தெரியாதென தெரிவித்த அனந்தி தான் பேசாதவற்றினை பேசியதாக சித்தார்த்தன் தரப்பே ஊடகங்களிற்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கின்றார்.

யாழினில் கடந்த காலங்களினில் டக்ளஸ் எத்தகைய கொலைகளை அரங்கேற்றினாரோ அதற்கு ஈடாக சித்தார்த்தன் வவுனியாவில் செய்தவை மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.கப்பம் முதல் கடத்தப்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்தவை வரை அவரது துணை ஆயுதக்குழு செய்தவை சொல்லில் அடங்காது.

காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்பி போராடி வரும் நான் அவற்றினை செய்த தரப்புக்களிற்கு ஆதவாக பிரச்சாரம் செய்ததாக வெளிவந்துள்ளமை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதொன்றல்லவெனவும் அனந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment