அப்பன் பெயர் தெரியாத மாவை சேனாதிராசா!
தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய தொடர்பு நிலை குறித்த சுவாரஷிய தகவல்கள் பலவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உதயத்தை தொடர்ந்து வெளியில் வந்த வண்ணம் உள்ளன.
புலிகள் இயக்கத்திலும் நகைச்சுவை கலந்த குறும்பு நிறைந்த உறுப்பினர்கள் இருந்து உள்ளனர். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி வன்னிக்கு வருகின்றமை வழக்கம். வன்னியில் தம்பிமார்களுக்கு முன்னால் பிரசன்னமாகின்றபோது இந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை கொட்டி, வாய் பொத்தி நிற்பார்கள்.
தலைவரை சந்திக்க செல்கின்ற நபர்களின் பெயர் அதிகாரம் அளிக்கப்பட்ட தம்பிமாரால் முதலில் வாசித்துக் காட்டப்படும். எல்லோருடைய பெயரையும் வாசிப்பார்கள். ஆனால் ஒரு நபரின் பெயர் மாத்திரம் பெரும்பாலும் வாசிக்கப்படவே மாட்டாது.
அப்பன் பெயர் தெரியாத அந்த நபர் எங்கே? என்கிற குறும்புக் கேள்வி மட்டும் ஒலிக்கும். அப்போது இங்கே இருக்கின்றார் என்று சொல்லி சிரித்துக் கொண்டு முன்னால் வந்து நிற்பார் சேனாதிராசா.
மாவை என்பது இவரின் ஊரான மாவிட்டபுரத்தை குறிக்கின்றது. இவருடைய தகப்பனின் பெயரை இவர் ஏதோ ஒரு காரணத்துக்காக பயன்படுத்துவதே இல்லை. இவருடைய தகப்பனின் பெயர் இவரின் ஆட்களுக்குக்கூட பெரும்பாலும் தெரியாது.
இச்சூழலில்தான் அப்பன் பெயர் தெரியாதவர் என்கிற பட்டம் இவருடன் ஒட்டிக் கொண்டது. தலைவர் பிரபாகரனின் காதுகளுக்கும் புலி உறுப்பினர்களின் குறும்புத்தனம் சென்றது. இலேசாக சிரித்தாராம்.
No comments:
Post a Comment