June 4, 2015

அடிப்படை வசதிகள் வேண்டும். மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
‘மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரப் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பதுளை வீதியிலுள்ள கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தெரிவிப்பது யாதெனில் 2014.11.26ம் திகதி அன்று எமது அமைப்பின் மூலம் தங்களுக்கு தரப்பட்ட கடிதத்தின் பின்னர் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளருக்கு 2015.02.04ம் திகதி அன்று டீவுஃனுPளுஃபுநுNசுடுஃறுடைன டுகைநஃ2015 என இலக்கமிடப்பட்ட கடிதமொன்று காணி அனுமதிப் பத்திரம் வழங்கல் சம்பந்தமாக மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் மூலம் அனுப்பப்பட்ட பின்னர் கோப்பாவெளி தும்பாலஞ்சோலை கித்துள் சர்வோதய நகர்-95 கிராம மக்கள் சிலருக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் மூலம் வழங்கப்பட்டதையிட்டு அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளருக்கும் எமது இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கின்றோம்.எனினும் இன்னும் எமது கிராம மக்களில் அதிகளவானோருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இக்காணி அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றோம்.இடம்பெயர்ந்து மீள்குடியேற்றியது முதல் அன்றிலிருந்து இன்றுவரை தீர்வு காணப்படாத பிரச்சனைகளாக யானைப் பிரச்சனை குடிநீர் பிரச்சனை வீட்டு வசதியின்மை வீதி சீரின்மை மலசலகூட வசதியின்மை போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றது.யானைப் பிரச்சனை சம்பந்தமான மாவட்ட திட்டமிடல் செயலகத்தின் மூலம் 2015.02.05ம் திகதி அன்று வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடித்திற்கு வனஜீவராசிகள் திணைக்களம் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் கோப்பாவெளி மற்றும் தும்பாலஞ்சோலை கிராமங்களில் 2015.05.12ம் திகதி அன்று இரவு 12 மணியளவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகளினால் 06 குடுமபங்களில் வீடுகள் சேதமடைந்துள்ள அதேவேளை உணவுக்காக சேமித்து வைத்த தானியங்களையும் உண்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்கள்.
இடம்பெயர்ந்து மீள்குடியேறி எதுவித அடிப்படை வசதிகளும் இல்லாது வாழும் 03 குடும்பங்களின் வீடுகளும் மற்றும் சர்வோதய நிறுவனம் வழங்கிய 02 குடும்பங்களின் வீடுகளும் அரசாங்கத்தின் மூலம் ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியில் கடந்த வருடம் அமைக்கப்பட்ட ஒரு வீடும் யானையினால் சேதமாக்கப்பட்டுள்ளது. ஆகவே எமது பிரதேச எல்லை கிராமங்களில் வனஜீவராசிகள் திணைக்கள பிராந்திய காரியாலயமொன்றை அமைக்க வேண்டுமென மக்களாகிய நாங்கள் கருதுகின்றோம்.
குடிசை வீடுகளில் இன்னும் பல இன்னல்களுக்கு மத்தியில் எமது கிராம மக்கள் வசித்து வருகின்றார்கள். அதிகளவான செப்ப நிலை நிலவும் காலங்களில் வீட்டில் வசிக்க முடியாத நிலை. மழை வீழ்ச்சி கிடைக்கின்ற இக்காலங்களிலும் வீட்டில் வசிக்க முடியாத நிலை. இளஞ் சிறார்களையும் இவ்வீட்டினில் வைத்துக் கொண்டு எமது கிராம மக்கள் சொல்லலொனா துயரங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வருகின்றார்கள். (கித்துள்இ சர்வோதயநகர் கோப்பாவெளி) வருடா வருடம் எமது கிராம மக்கள் குடிநீர் பிரச்சனைக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். குடிநீர் பிரச்சனை காரணமாக வீட்டு வன்முறைகள் அதிகளவில் ஏற்படுகின்றது. தூய்மையான குடி நீரின்மையால் சிறுவர்கள் நோய்வாய்ப்படுகின்றது அதிகரித்துள்ளது. குழாய் நீர் கட்டமைப்ப ஏற்படுத்துவதன் மூலமே இதற்கு தீர்வு எட்டப்படும் என மக்களாகிய நாம் கருதுகின்றோம். (கித்துள் சர்வோதயநகர் உறுகாமம் தும்பாலஞ்சொலை கோப்பாவெளி வெலிக்காக்கண்டி)வீதி சீரின்மை காரணமாக மழைக் காலங்களில் வீதியால் பயயிக்க முடியாம நிலை. பாடசாலை செல்லும் சிறுவர்கள் கிராமங்களில் நோய் வாய்ப்படுபவர்களை அவசரமாக கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வெலிக்காக்கண்டி குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீர் வெலிக்காண்டி வீதியை ஊடருத்து செல்வதனால் மழை வீழ்ச்சி கிடைக்கும் காலங்களில் வீதியால் பயணிக்க முடியா நிலை வருடா வருடம் ஏற்படுகின்றது. (வெலிக்காக்கண்டி) மலசல கூட வசதியின்மை காரணமாக பல்வேறுபட்ட சுகாதாரப் பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். (கித்துள் சர்வோதயநகர உறுகாமம் தும்பாலஞ்சொலை கோப்பாவெளி).
இக்கிராமங்களில் நிலவுகின்ற மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை கிராம மக்களின் நலன்கருதி தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுன் கேட்டுக் கொள்கின்றோம்’ என குறிப்பிடப்பட்ட கடிதத்தின் பிரதிகள் கௌரவ ஜனாதிபதி ஏறாவூரப் பற்று பிரதேச செயலாளர்
    தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் கொழும்பு ஆகியவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment