June 9, 2015

வெளிநாட்டு பேச்சுவார்த்தை: கூட்டமைப்பிற்குள்ளேயே சலசலப்பு!

இலங்கை அரசிற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் சர்வதேச பிரதிநிதித்துவத்துடன் வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ள பல சுற்ற இரகசிய பேச்சு இலங்கையில் பலத்த சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
தென்னிலங்கையில் மகிந்த அணியினர் அதற்கெதிரான பிரசார யுத்தத்தை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்திலும் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த பேச்சுக்களை பகிரங்கமாகவே விமர்சித்துள்ளார். முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றும் மயற்சியா இதுவென கேள்வியெழுப்பியுள்ளார்.
‘வடக்கு, கிழக்கு தமிழ்மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் குறித்து உள்நாட்டில் பேசாமல் வெளிநாட்டில் அதுவும் இரகசியமாக பேசுவது விந்தையானது.
இந்த கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? என்ன பேசப்பட்டது? என்பதை கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால், சர்வதேசவிசாரணையிலிருந்து முன்னைய ஆட்சியாளர்களை காப்பாற்றும் ஒரு இரகசிய திட்டமென்றே நாங்களும், மக்களும் கருதவேண்டு வரும் என்றார்.
இதேவேளை, இந்த பேச்சிற்கு விமல் வீரவன்சவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் தற்போதைய அரசின் ஒரு திட்டமே இந்த பேச்சென வர்ணித்துள்ளார்.
பாரதூரமான குற்றச்சாட்டுள்ள 300 புலிகளை விடுவிக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கிறது. 4இலட்சம் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இரட்டை பிரஜாவுரிமை கொடுக்கவுள்ளது. இப்பொழுது பாதர் இம்மானுவேலுடன் இரகசிய பேச்சு நடக்கிறது. இது நாட்டை பிளவுபடுத்தும் நிகழ்ச்சிநிரலே என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment