June 7, 2015

சர்வதேசவிசாரணைக்கெதிரான ஜெனீவாவில் போரடியவர்களே எம்மீது குற்றம்சாட்டுகிறார்கள்: சுமந்திரன் விளக்கம்!

சர்வதேச விசாரணையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைவிட்டு விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையென கூறுகிறார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை இந்த
இரண்டில் ஒன்றுதான் சாத்தியமென்பதைபோல பிசாரம் செய்பவர்கள், விடயங்களை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். நேற்று தீபம் தொலைக்காட்சியின் அக்கினிவலம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் இதனை கூறினார்.
‘சென்றவருடம் இலங்கை தொடர்பான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணை அறிக்கை இந்த வருடம் செப்ரம்பரில் வெளிவருவதாக இருந்தது. எனினும் இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளிற்கமைவாக ஒருதடவை மாத்திரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணை எற்கனவே முடிந்து விட்டது. இந்த உண்மையை புரியால், சர்வதேசவிசாரணையை நாங்கள் கைவிட்டு விட்டதாக சிலர் பிரசாரம் செய்கிறார்கள்.
சென்ற வருடம் விசாரணைக்குழு அமைப்பதிலும், பிரேரணை நிறைவேற்றுவதிலும் நாங்கள்தான் ஊக்கமாக செயற்பட்டோம். அந்த சமயத்தில், இந்த விசாரணைக்கு எதிராக குரல் கொடுத்து, இந்த விசாரணையினால் பலனில்லையென கூறி, ஐ.நாவிற்கு வெளியில் போராடி, அந்த தீர்மானம் வரக்கூடாதென பலத்த பிரயத்தனம் செய்தவர்கள்தான் இன்று எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். அவர்கள் அப்பொழுது எதிர்த்த அறிக்கையை நாங்கள் இப்பொழுது கைவிட்டுவிட்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
சர்வதேச விசாரணை அறிக்கை வெளியானாலும், அது உள்நாட்டு சட்டங்களை போல நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற எந்த சர்வதேச சட்டநியதியும் கிடையாது. சர்வதேசமும் இலங்கையும் ஒத்துழைத்து செயற்பட்டு, சர்வதேச விசாரணை அறக்கையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கும் பட்சத்தில் நிச்சயம் உள்ளக பொறிமுறையொன்று அவசியம். அந்த பொறிமுறையினூடாகத்தான் உள்நாட்டில் அதனை நடைறைப்படுத்தலாம். இந்த உள்ளக பொறிமுறையை உருவாக்குவதற்குத்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது’ என்றார்

No comments:

Post a Comment