May 6, 2015

தரணியெங்கும் தமிழர்களின் பிம்பமாக தமிழின அடையாளங்களில் ஒன்றாக பயணிக்கும் TTN தமிழ்த்தொலைக்காட்சி!

அன்புடையீர்,
தரணியெங்கும் தமிழர்களின் பிம்பமாக தமிழின அடையாளங்களில் ஒன்றாக பயணிக்கும் TTN தமிழ்த்தொலைக்காட்சி இணையம், தமிழ் மக்களால் தமிழ் மக்களுக்காக நடாத்தப்படும் ஊடகமாகும். உலகின் அனைத்துப்பாகங்களிலும் இருந்தும் எம்முடன் இணைந்து, எமது இலக்கு நோக்கிப்பல்லாயிரம் உறவுகள் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் எம்முடன் இணைந்து, தமிழின் ஒளிப்பாய்ச்சலை பலப்படுத்த முன்வந்தவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் தன்னிச்சையாக, எமது விதிமுறைகளுக்கு அப்பாலான, எமது தொலைக்காட்சியின் நற்பெயருக்குப்பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றமை கவலைக்குரியதும், கண்டனத்துக்குரியதும் ஆகும்.
இத்தகைய செயல்களோ, கருத்துக்களோ அவருடைய தனிப்பட்ட செயல்களும் கருத்துக்களுமே அன்றி, எமது தொலைக்காட்சியினுடையது அல்ல.
எமது வெளியீடுகள், ஒளிபரப்புகள், அறிக்கைகள் யாவும் வழமைபோல எமது உத்தியோகபூர்வ சமூக, இணைய வலைத்தளங்களில் மாத்திரமே வெளிவரும். எமது அடையாளங்களைத்தாங்கி, பிறரால் வெளியிடப்படும் ஆக்கங்களுக்கும், முன்னெடுப்புக்களுக்கும் TTN தமிழ்த்தொலைக்காட்சி இணையம் பாத்திரவாளிகள் அல்ல என்பதனை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது உத்தியோகபூர்வ சமூக, இணையத்தளங்கள்:
www.tvttn.tv
www.facebook.com/tvttn.tv
www.youtube.com/tvttn
www.twitter.com/tvttn
www.vimeo.com/tvttn
நடைபெற இருக்கும் பிரித்தானிய தேர்தலில், எமது ஊடகமானது எந்த வகையிலும் கட்சிப்பாகுபாடோ அல்லது கட்சி சார்ந்தோ செயற்படாது என்பதனை இங்கு தெரிவிப்பதோடு, நாம் என்றும் தமிழர்களின் வளர்ச்சிக்கும், உலகளாவிய ரீதியில் அரசியல் ரீதியிலான தமிழர்களின் பிரதிநிதித்துவத்திற்கும், அதனை முன்னெடுப்பவர்களுக்கும் உறுதுணையாக இருப்போம் என்பதனையும் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி.
நிர்வாகம்
TTN - தமிழ்த்தொலைக்காட்சி இணையம்

No comments:

Post a Comment