May 20, 2015

சம்பூரில் மூன்றாவது நாளாகத் தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்!

சொந்த இடத்தில் தம்மை மீளக்குடியமர்த்துமாறு வலியுறுத்தி, சம்பூர் கிளிவெட்டி நலன்புரி முகாமில் உள்ள மக்கள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
புதிய அரசாங்கம் மீள்குடியேற்றுவதாக வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட
மக்கள் சுட்டிக்காட்டினர்.
2006ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், கிளிவெட்டி, கட்டை பறிச்சான், மணற்சேனை, பட்டித்திடல் ஆகிய நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
சுமார் 10 வருடங்களாக அடிப்படைவசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் அவலத்துடன் வாழும் தம்மை தமது சொந்த இடமான சம்பூரில் மீளக் குடியமர்த்துமாறு வலியுறுத்தி கிளிவெட்டி நலன்புரி முகாமில் உள்ள மக்கள் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment