May 19, 2015

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் போக்குவரத்து விதிமுறைகளினை மீறிய சாரதிகளுக்கு அபராதம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளினை மீறிய வாகன சாரதிகளுக்கு 33,500 ரூபா அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று(18) தீர்ப்பளித்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர்
ஆர்.ஏ.டி.றொஹான் மகேஸ் இன்று (19) தெரிவித்தார்.
சாரதி அனுமதிபத்திரம் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய ஆனைக்கோட்டை பகுதியினை சேர்ந்த நபரக்கு 10,000 ரூபா அபராதமும், சாரதி அனுமதிபத்திரம், வருமானவரிப்பத்திரம் மற்றும், காப்புறுதி பத்திரம் இன்றி முச்சக்சக்கரவண்டி செலுத்திய சுன்னாகம் பகுதியினை சேர்ந்த நபருக்கு 8,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதவான் கறுப்பையா ஜீவராணி, இடையூறுகளுக்கு மத்தியில் முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதிக்கு 1,500 ரூபாவும்,
தலைக்கவசம், வருமான வரிப்பத்திரம், மற்றும் காப்புறுதிபத்திரம் இன்றி ஹயஸ் வான் ஓடிய கொக்குவில் பகுதியினை சேர்ந்த நபருக்கு 7,500 ரூபாவும் இதன் போது அபராதமாக செலுத்த நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், தலைக்கவசம் இன்றி, வாகனம் செலுத்தியதுடன், பொலிஸாரின் சமிக்கைக்கு கட்டுப்படாமல் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு 5,000 ரூபாவும், முச்சக்கரவண்டியில் மேலதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற, மானிப்பாய் பகுதியினை சேர்ந்த சாரதிக்கு 1,500 ரூபாவும் அபராதமாக செலுத்த நீதவான் இதன் போது உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment