May 16, 2015

பாடசாலை மாணவி வித்தியா மீதான வன்புணர்வுக்கும் கொலைக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

யாழ் புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது கடத்தப்பட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மேற்படி சிறுமியின் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

மாணவி சம்பவ தினம் வீடு திரும்பாமை தெடர்பில் குடும்பத்தினரால் பொலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் அவர்கள் கீழ்தரமான கருத்துக்களை கூறி குடும்பத்தினரை அவமதித்து அனுப்பியுள்ளனர். பொலீசாரது பொறுப்பற்றவிதமான பதிலும் செயற்பாடும் குற்றவாளிகளுக்கு துணை புரிந்துள்ளது. பொலீசார் இவ்வாறு பொறுப்பற்ற விதமாக செயற்பாடாது உடன் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால்; குறித்த சிறுமியை ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். பொலீசாரது இத்தகைய பொறுப்பற்ற செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

No comments:

Post a Comment