May 16, 2015

கிழக்கு பல்கலையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமைக்கு சிங்கள மாணவர்கள் அதிகாரி மீது தாக்குதல்!

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் பலர் அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, தமிழ் மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள், ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளம் குடும்பஸ்தரான குறித்த அதிகாரி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பத்தக்குட்டி சுமன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சிங்கள மாணவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment