May 4, 2015

ஜோன் கெரி சந்திப்பில் வாய்மூட வைக்கப்பட்ட விக்கி,சுரேஸ்!

இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாய் திறக்க கூட சம்பந்தன் மற்றும் சுமந்திரன்
அனுமதித்திராமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.
எனினும் நிலைவரத்தை முன்கூட்டியே சுதாகரித்துக்கொண்ட முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்திலிருந்தே ஜோன் கெரியிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய தேவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
சந்திப்பில் மைத்திரி அரசிற்கு சம்பந்தன் பாராட்டுப்பத்திரம் வாசிக்க இரண்டு தடவைகளாக குறுக்கிட்ட சுரேஸ்பிறேமச்சந்திரன் அதனை மறுதலித்து அரசியல் தீர்வு ஒன்று கிட்டும் வரையில் இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்குவது பற்றி பேச முற்பட இரு தடவைகளும் சம்பந்தன் அதனை தடுத்துள்ளார்.ஒரு கட்டத்தில் வாயை மூடிக்கொண்டிருக்குமாறு சுரேஸிற்கு தமிழில் சம்பந்தன் சீற அவர் அமைதியாகியுள்ளார்.
இதனிடையே அழைத்துவரப்பட்டிருந்த வடக்கு முதலமைச்சரோ வெறும் காட்சிப்பொம்மை போல இருக்கவே வைக்கப்பட்டிருந்தார். அவரை கருத்துக்களினை தெரிவிக்கவோ பேசவோ சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அனுமதித்திருக்கவில்லை.

No comments:

Post a Comment