May 31, 2015

பிரான்சில் தமிழினப்படுகொலை ஆவணப் புகைப்படக் கண்காட்சியடங்கிய கவனயீர்ப்பு!

தமிழினப் படுகொலை நாள் மே 18 ஐ நினைவுகூரும் பொருட்டு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் அனுசரணையில், பிரெஞ்சு நாடாளுமன்றம் அமைந்துள்ள அன்வலிற் ( Place de la Invalides) பகுதியில் தமிழினப்படுகொலை
ஆவணப் புகைப்படக் கண்காட்சியடங்கிய கவனயீரப்பு நிகழ்வு வரும் யூன் முதலாம் நாள் திங்கட்கிழமை முதல் யூன் ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிமுதல் மாலை 17.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
இதன் தொடர்ச்சியாக வரும் யூன் மாதம் ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 29 ஆவது கூட்டத்தொடர் ஆரம்­ப­மா­வதை முன்னிட்டு யூன் 15 ஆம் நாள் முதல் யூன் 26 ஆம் நாள் வரை தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி குறித்த தமிழினப்படுகொலை ஆவணப் புகைப்படக் கண்காட்சியடங்கிய கவனயீர்ப்பு நிகழ்வு ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment