May 31, 2015

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சி! பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு!

பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்ட கருத்தினால், தொடர்ந்தும் புலிகளின் விருப்பு வெறுப்புகளுக்காக குரல் கொடுப்பது போன்று உள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விஜயகலாவிற்கு மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையும் அது போன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலை புலிகள் இருந்த போது வடக்கில் இளைஞர்களுக்கு முழுமையான சுதந்திரம் காணப்பட்டதாக விஜயகலா குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.
ஊழல் மோசடிகள் இடம்பெறவில்லை எனவும், இந்த நாட்டு பாதுகாப்பு பிரிவை விட, விடுதலை புலிகளின் ஆட்சியின் போது மிகவும் சுதந்திரமான சூழல் காணப்பட்டதனை அவர் சுட்டிக்காட்ட முயற்சித்ததாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே விடுதலை புலிகளுக்கு சார்பான அரசியல்வாதி ஒருவருக்கு நாட்டில் பிரதி அமைச்சர் பதவி வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சி, விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment