கிராம மட்டத்தில் போதையொழிப்பு திட்டத்தினை மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கமடத்தில் ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போதையற்ற கிராமங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கிராமமட்ட போதைதடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குருக்கள்மடம் பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,கிராம சேவையாளர்கள்,சமுர்;த்தி,அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அறிவுறுத்தும் கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ் தங்கராஜாவின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை மதுவரித்திணைக்களத்தின் குற்றப்பிரிவு ஆணையாளர் டி.மல்லவ பிரதம அதிதியாக கலந்துகொண்டு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அதிகளவில் நடுத்தர மற்றும் கீழ் நிலையில் உள்ள குடும்பங்களிலேயே மதுபாவனை அதிகநிலையில் உள்ளது.இவற்றினை தடுப்பதற்கான வழிவகைகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டும்.அதற்கான திட்டங்களை உள்ளூர் அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும் அதற்கு தேவையான உதவிகளை மதுவரித்திணைக்களம் மேற்கொள்ளும்.
சில பகுதிகளில் மதுபானசாலைகளை பூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.அவை சிலவேளைகளில் நியாயமான கோரிக்கைகளாக உள்ளனர்.ஆனால் மதுபானசாலைகளை பூட்டுவதனாலும் சில தீமைகள் சமூகத்திற்கு ஏற்படுகின்றன.அதாவது சட்ட விரோத மதுவிற்பனைகள் அதிகரிப்பதனால் கிராம மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றார்.