May 8, 2015

யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுக்க விசேட கலந்துரையாடல். ( படங்கள் இணைப்பு)

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும்
பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து மாகாண சிரேஷ்ர பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்றையதினம் காலை 10 மணியளவில் காங்கேசன்துறையில் நடைபெற்றது.

இதன்போது யாழ்.குடாநாட்டில் போக்குவரத்து பொலிஸாரின் அத்துமீறல்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக போக்குவரத்து பொலிஸார் லஞ்சம் பெறுவது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பொலிஸார் குற்றவாளிகள் போன்று சாரதிகளை பிடிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பை கோரியிருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபர் போதைப்பொருள் யாழ்.குடாநாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன் ஒரு சில பொலிஸாரின் செயற்பாடுகளை வைத்து ஒட்டுமொத்த பொலிஸ் துறையையும் தவறாக கருத வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.


No comments:

Post a Comment