உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவு கூருவதற்கு ஒரு போதும் தயங்க மாட்டோம் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளுக்கு விளக்கேற்றியமை குறித்து மேற்கொள்ளப்பட்ட
விசாரணையில் தன்னுடைய விளக்கத்தை முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் அளித்து விட்டு வெளியே வந்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அங்கு காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
“உயிரிழந்த எங்கள் உறவுகளை நினைவு கூருவது எங்கள் உரிமை. அது எங்கள் பாரம்பரியம்..பண்பாடு..
எனது உறவுகளில், உயிரிழந்த மாவீரர்கள் உள்ளனர். அதுபோன்றே தாயகத்தில் உள்ள எங்கள் மக்கள் அனைவரினதும் உறவுகளில் மாவீரர்கள் நிறைந்திருக்கிறார்கள்.
உயிரிழந்த மாவீரர்கள் உள்ளடங்கலாக எங்கள் அனைத்து உறவுகளையும் உரிய நாட்களில் நினைவு கூருவதற்கு நானோ ,எங்கள் மக்களோ ஒருபோதும் தயங்கமாட்டோம். இதுவரை காக்கப்பட்ட எங்கள் மண்ணின் பண்பாடுகள் இனியும் காக்கப்படும். என்றார்.

No comments:
Post a Comment