இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய
குழு கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றுள்ள நிலையில் வடக்கு முதலமைச்சர்
விக்கினேஸ்வரன்,
வடமாகாணசபையின் பிரதி தவிசாளர் அன்ரன் ஜெகநாதன் ஆகியோருடன் தானும் புறக்கணித்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளார்.
நேற்று வவுனியா நகரிலுள்ள விருந்தினர் விடுதி மண்டபத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்.
இக்கூட்டத்திற்கான அழைப்பினை வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மத்திய குழு உறுப்பினரும் முல்லைதீவு மாவட்ட கிளை தலைவரும் வடமாகாணசபையின் பிரதி தவிசாளர் அன்ரன் ஜெகநாதன் ஆகியோர் புறக்கணித்துவிட்டதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வன்னியிலுள்ள மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மலையக பிரதிநிதியொருவரை மத்திய குழவில் உள்ளீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரியிருந்தார். அது புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே அவரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

No comments:
Post a Comment