இராணுவத்தின் பிடியிலிருக்கும் சம்பூர் கிராமம் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள போதும் இதுவொரு
கண்துடைப்பென இடம்பெயர்ந்த மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையம் அமைப்பதற்காக முந்நூறிற்கும் மேற்பட்ட பரப்பளவுடைய காணிகளை சம்பூரில் உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அபகரித்துள்ளது. அதே போன்றே முதலீட்டு அதிகாரசபையால் 818 ஏக்கர் நிலப்பரப்புப்பட்டு அங்கு வாழ்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
இவர்களை சம்பந்தன் எம்.பி. நேற்று சந்தித்தார். இதன்போது "நாளை (இன்று) வியாழக்கிழமை ஜனாதிபதி, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருடன் உயர்மட்ட பேச்சு இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் சம்பூர் விடுவிக்கப்பட்டது என்ற் செய்தியை கேட்பீர்கள். "இதற்கு நீங்கள் நடத்திய போராட்டங்களே காரணம். இந்த வார முடிவில் நீங்கள் அங்கு மீளக்குடியேற முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் கடற்படை வசம் தொடர்ந்திருக்கும் முந்நூறிற்கும் மேம்பட்ட பரப்பளவுடைய காணியே மீள்குடியமர்விற்கு உடனடியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் எனவும் இது பற்றி சம்பந்தனோ இலங்கை அரசோ வாய்திறக்க மறுப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
No comments:
Post a Comment