May 7, 2015

சொன்னது விடுவிக்கப்படாதா? சம்பூரின் கதை மாறுகின்றது!

திருமலையினில் இலங்கை முதலீட்டு சபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுவதாக கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையினில் சம்பூர் கடற்படை முகாமின் பயிற்சி நிலையமே வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக கொழும்பில் இன்று
வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியளார்கள் சந்திப்பின்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை முதலீட்டு சபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளும்; விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட போதும் இக்காணிகளுள்ளேயே இந்திய அனல்மின்நிலைய அமைப்பு பணிகள் இடம்பெறவுள்ளது.

இலங்கை கடற்படையினரின் பொறுப்பில் கடற்படையினருக்கான பயிற்சி நிலையம் அமைந்திருந்த 237 ஏக்கர் காணியும் அந்தக் காணிகளின் உரிமையாளர்களான இடம்பெயர்ந்துள்ள மக்களிடம் திருப்பிக் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

சம்பூர் கடற்படை முகாமின் பயிற்சி நிலையம் கடந்த 2007 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளத்தையும் கடற்பரப்பை அண்டியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் கடற்படை தளம் காரணமாக பாதிக்கப்பட்ட 605 குடும்பங்களும் இலங்கை முதலீட்டு சபையினால் கையகப்படுத்தப்பட்ட 818 ஏக்கர் காணிகள் காரணமாக 240 குடும்பங்களும் இடம்பெயர்ந்து கடந்த எட்டுவருடங்களாக அகதி வாழ்க்கையினை வாழந்து வருகின்றன.

இவர்கள் கிளிவெட்டி,கட்டைப்பறிச்சான்,கட்டித்திடல்,மணல்சேனை ஆகிய பகுதிகளினில் அகதிகளாக வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment