புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு நீதி வழங்கக் கோரி இன்று வவுனியாவில் கடையடைப்பு, போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
வவுனியாவில் பிரதான வீதிகளில் நிற்கும் மக்களை பொலிஸார் விரட்டியடித்ததுடன் சிலர் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா, முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் நின்ற ஓட்டோ சாரதிகள் மற்றும் பொதுமக்களை அங்கிருந்து விரட்டியடித்த பொலிஸார் வாகனங்களில் சென்றும் பின்னால் துரத்திச் சென்றும் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களில் பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மன்னார் வீதிவழியாக சென்று வவுனியா நகரம் நோக்கி அமைதியாக ஊர்வலமாக செல்ல முற்பட்ட வேளை குருமன்காடு பகுதியில் வைத்து அவர்களின் பதாதைகளை பறித்து எறிந்த பொலிஸார் அவர்களையும் விரட்டியடித்தனர்.
இதேவேளை, வவுனியா நீதிமன்றத்தைச் சூழ பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment