May 8, 2015

மனித மிருகங்களால் பண்டத்தரிப்பில் வரும் சனிக்கிழமை நடாத்தப்படவுள்ள வேள்வி!

எதிர்வரும்  சனிக்கிழமை மீண்டுமொரு மனித குலத்திந்கே இழிவினை ஏற்படுத்தும் ஆலய இறைச்சி வியாபாரம் பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இடம்பெறவிருக்கின்றது.
இந்து மற்றும் பௌத்த மத கொள்ளைகளுக்கு முரணான மிகவும்
பிற்போக்கான முறையில் சமய வேள்வி எனும் பெயரில் இது நடைபெறவிருக்கின்றது.
இது சமய வழிபாட்டு முறை என சிலர் வாதிட்டாலும் இது மிகவும் பிற்போக்கான ஒரு மனிதக் கும்பலால் மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இவ் உண்மை விளங்கும்.
வேள்விக்கு முதல் நாளன்று பந்தல் அமைத்து சோடனைகள் மேற்கொண்டு ஒலிபெருக்கிகள் பொருத்தி பாடல்கள் இசைத்து ஆட்டுக்கடாவினை பந்தலில் இருத்தி தங்க ஆபரணங்கள் அணிவித்து போட்டியாக தங்களது ஆட்டுக்கடா பார்க்கும் நிகழ்வு பெரும் பொருட்செலவோடு இடம்பெறும்.
இதனைப் பெருந்திரளான மக்கள் மதுபோதையுடன் சுற்றிதிதிருந்து பார்ப்பார்கள். இவ்வைபவத்தில் பட்டாசு கொழுத்துதலும் குழு மோதல்களும் வழமையாக இடம்பெறும்.
மறுநாள் வேள்வியன்றும் வாகனங்களில் தமது ஆட்டுக்கடாக்களை அலங்கரித்து. சுழல் ராட்டினங்களிலும் ஊர்வலமாக தெருத்தெருவாக் பாண்ட் வாத்தியம் பட்டாசு சகிதம் மது போதையில் அழைத்துச்சென்று இறுதியில் வேள்வி நடக்கும் ஆலயத்திற்குச் சென்று கோரமாக கொலைசெய்து ஆலயத்திலேயே அதிக விலைபேசி விற்பார்கள்.
இக்காட்சிகளை சிறுவர்கள் பெண்கள் உட்பட பலர் பார்ப்பார்கள். இதுதான் மக்களை நல்வழிப்படுத்தும் சமய முறை என யாரும் வாதிட்டால் அவர்களை என்ன பிறவி என்று கூறுவதென்று தெரியவில்லை.
இந்த நவீன காலத்தில் இப்படிப் பட்ட பிற்போக்கான எண்ணத்துடன் வாழும் இவர்களை நினைத்தால் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது.
இது தொடர்பாக ஆலய நிர்வாகி ஒருவர் கூறும்போது போன வருஷம் பொலிஸிற்கு முப்பதாயிரம் ரூபா பெறுமதியான இறைச்சியும் கேஸ் கேசாக சாராயமும் வாங்கிக் குடுத்தனாங்கள் அதனாலை நல்லபடியாக நடத்த விட்டவங்கள். இந்த முறை சுகாதாரப் பகுதிதான் பிரச்சினை குடுக்கினம் என்றார்.
இது போன்ற வன்முறைச்சம்பவங்கள்தான் இன்றைய வாள் வெட்டு, கொலை போன்றவற்றிற்கு தூண்டுகோலாக அமைகிறது என சமூக ஆர்வலர்கள் பலரும் கூறுகின்றார்கள்.
இந்த நிலையிலும்கூட தமிழ் அரசியல்வாதிகள் இது தொடர்பாக மூச்சும் விடமாட்டார்கள் என்பது உறுதி. அவர்களுக்கு தமது மக்களின் நலனைவிட தேர்தலில் கிடைக்கப்போகும் வாக்குகள்தான் முக்கியம். சுயநலவாத ஊடகங்களும் தமது சுயநலனுக்காக ஆலய இறைச்சி வியாபாரத்தினை நியாயப்படுத்தி நீலிக் கண்ணீர் வடிக்கின்றமையும் வேதனைக்குரியது.
சென்ற வாரத்தில் சுழிபுரத்தில் நடைபெற்ற வேள்வியில் சுகாதாரப் பிரினரின் இறுக்கமான கட்டுப்பாட்டால் பல நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டிச் சாய்க்காமல் தப்பியது.
ஆடுகள் வெட்டிச்சாய்க்கப்படவில்லை என்பதால் கவலையடைந்த உதயன் பத்திரிகையின் வலி வடக்கு செய்தியாளர் மிகவும் வேதனையுடன் செய்தி பிரசுரித்திருந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும் இலங்கை நாட்டின் புனித வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வெசாக் வாரத்தில் எதிர்வரும் 9-5-2015 சனிக்கிழமை இலங்கை நாட்டிற்கே இழிவினை ஏற்படுத்தும் சமயத்தின் பெயரால் நடாத்தப்படும் இறைச்சி வியாபாரம் பண்டத்தரிப்பு பிரான்பற்றில் இடம்பெறவிருக்கின்றது என்பது உறுதி.
நடைபெறுகின்ற நல்லாட்சியிலாவது காட்டுவாசிகளிடமிருந்து ஆலயத்தின் புனிதம் காக்கப்படுமா?

No comments:

Post a Comment