வடமராட்சி கிழக்கில் இலங்கை காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கின் குடத்தனை பகுதியில் பதுங்கியிருந்த இலங்கை
காவல்துறையினர் சட்டவிரோதமாக மணல் ஏற்ற வந்திருந்த வாகனமொன்றை தடுக்க முற்பட்டதாகவும் அவ்வேளையில் தப்பித்து செல்ல முற்பட்டவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் தாங்கள் எச்சரிக்கை வேட்டுக்களினையே தீர்த்ததாகவும் அவ்வேளையில் தப்பிச்செல்லப்பட்ட நபரொருவர் கழுத்தை ரவைகள் தாக்கியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் தாஸ் என்றழைக்கப்படும் 28 வயதுடைய குடும்பஸ்தரென கூறப்படுகின்றது.
காயமடைந்த நபர் முன்னதாக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:
Post a Comment