April 29, 2015

கனடிய அரசின் போக்கில் மாற்றம் எப்படி ஏற்படுத்தப்பட்டது எப்படி? விளக்குகிறார் பற்றிக் பிரவுண்( படங்கள் இணைப்பு)

இலங்கையில் தமிழர்களிற்கு அநீதி நடக்கிறது என்ற கருத்தை தனியாளாக நான் எனது கட்சி சார்ந்த கூட்டங்களில் தெரிவித்த போது முதலில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எனது கருத்திற்கு ஆதரவளித்தனர்.
மீண்டும் மீண்டும் நான் கூற இலங்கைத் தமிழர்களிற்கு அநீதி
இழைக்கப்படுகிறது என்பதை 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
இதனைக் கண்ணுற்ற கௌரவ பிரதமர் ஆம் இந்த விடயத்தில் நாம் மேலும் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்பினார்.
அதற்கு முன்பாக நானும் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரும் செல்ல முனைந்த போது விசா மறுக்கப்பட்டதை எமது அரசு பாரதூரமாக நோக்கியது.
ஒட்டாவாவிலுள்ள சிறீலங்காத் தூதர் சந்தித்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் நானும் சந்தித்து அவர்களிற்குத் தமிழர்களின் பிரச்சினை என்ன என்பதை எடுத்துரைத்தேன் என திரு. பற்றிக் பிரவுண் அவர்கள் தெரிவித்தார்.
சிறீலங்கா தூதர் எமது பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க விடுதிக்கு வரும்போது விருந்தினர் வருகைப் புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும்.
எனவே அவர் யார் யாரையெல்லாம் சந்தித்தாரோ அவர்களை நான் அடுத்த நாள் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் தொடர்பான உண்மை நிலையை எடுத்துரைத்தேன்.
எனவே எனக்கு இந்தப் பிரச்சினை மீது இவ்வளவு ஈர்ப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் திருமதி ரஞ்சி சுரேஸ்குமாரும் அவரது குடும்பத்தினருமே. எனது அலுவலகத்திற்கு வந்து தாரைதாரையாக கண்ணீர் விட்டு அழுதார்கள்.
எனவே எனக்குத் தரப்பட்ட அறிவுறுத்தல்களையெல்லாம் மீறி நான் இந்த விடயத்தில் காலடி எடுத்து வைத்ததை பெருமையாகக் கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார்.
இன்று தான் எடுத்துவைத்த பாதை சரியென்பதை பலரும் உணருகிறார்கள். நான் பிறப்பால் தமிழனாக இல்லாவிட்டாலும், நான் தான் தமிழரின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகின்றேன்.
என் மீது தமிழர்கள் காட்டும் அன்பு அரசியலிற்கு அப்பாற்பட்டது. நான் அவர்களின் செல்லப்பிள்ளயாகி விட்டேன் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை தமிழர்கள் 14 ஆயிரம் பேர் அங்கத்துவர்களாக இணைந்ததை களங்கப்படுத்தவும், அவர்களுடைய ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் கனடாவின் தலைநகரிலுள்ள பெரும்பான்மையினத்தவர் ஒருவர் சில தமிழர்களின் உதவியோடு கடுமையாக முயல்வது கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment