April 26, 2015

விக்கி இராஜதந்திர வரைமுறையை மீறினாரா? ஆராய்கின்றனர் இலங்கை அதிகாரிகள்!

இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் அனுப்பியதன் மூலம் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், இராஜதந்திர வரைமுறையை மீறியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். இலங்கையின் அரசாட்சியின்
அடிப்ப டையில் முதலமைச்சர் ஒருவர் வெளிநாட்டின் தலைவர் ஒருவருக்கு கடிதம் அனுப்ப வேண்டுமாயின், அது வெளியுறவு அமைச்சின் மூலமாகவே அனுப்பப்பட வேண்டும் என்று அந்த அமைச்சின் அதிகாரிகள் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளனர்.

1994 ஆம் ஆண்டு பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறை மற்றும் கொலை சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களை விடுவிக்கக் கோரி அவர்க ளின் பிள்ளைகள் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்துக்கு விக்னேஸ்வரன் தமது நியாயாதிக்க ஒப்புதலை வழங்கியிருந்தார். இது இன்று இலங்கையில் பேசப்படும் முக்கிய அரசியல் பிரச்சினையாக ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறை மற்றும் கொலை சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு இலங்கையர்களை விடுவிக்கக் கோரி அவர்களின் பிள்ளைகள் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்துக்கு விக்னேஸ்வரன் தமது நியாயாதிக்க ஒப்புதலை வழங்கியிருந்தார். இது இன்று இலங்கையில் பேசப்படும் முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. எனினும் இந்திய – இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் இருக்கின்ற நல்லுறவு காரணமாக இந்த இராஜதந்திர வரைமுறை அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பிரேமானந்தா ஆச்சிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் என இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் உடகங் களுக்கு அறிக்கையொன்றினை வெளியிட் டுள்ளார்.

பிரேமானந்தா ஆச்சிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் குறித்த செய்தி தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அத்துடன் குறித்த செய்தி குறித்தும் தாம் ஆச்சரிய மடைவதாகவும் குறிப்பிட்ட செய்தி திரிவு படுத்தப்பட்ட ஒன்று எனவும் சுட்டிக்காட்டி யுள்ளார்.

குறித்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் மகள் அத்தண்டனையை இரத்துச் செய்யக்கோரி இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை முதலமைச்சரின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார். அந்தப் பெண்ணின் கடிதத்தை இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்த முதலமைச்சர், “சம்பந்தப்பட்டவர்கள் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுடைய கடிதத்தை உங்களுடைய கவனத்துக்கு அனுப்பிவைக்கிறேன்” என ஒரு குறிப்பை இணைத்துள்ளார்.

இதனைவிட கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் கோரவில்லை எனவும் முதலமைச் சரின் செயலகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment