April 24, 2015

யாழ் யுவதியின் தற்கொலைக்கு காரணமானவர் பொலிசாரால் கைது. !


யாழ்அல்லைப்பிட்டியில் கடந்த 20.01.14 அன்று நித்தியா அம்முக்குட்டி என்ற பல்கலைக்கழக மாணவி தற் கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்தது. இத்தற் கொலைக்கு காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் தொடர்
அழுத்தங்களால் தற்கொலை முயற்சியில் இறங்கி ஆபத்தை தாண்டிய நிலையில் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் தன்னை ஒரு ஊடகவியலாளனாக காட்டிக்  கொண்டு வலம் வந்தவர். இவர் முன்னால் விடுதலைப் புலிகளின் உளவுத்துறை முகவர்.
தம்பித்துரை பிரதீபன் எனப்படும் குறித்த நபரால் மேற்படி யுவதி கற்பழிக்கபட்டு ஏமாற்றப்பட்டமையை தாங்கமுடியாமலே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்திகள் பரவியபோதும்  நிலைமையை சமாளிக்க முடியாமல் பிரதீபன் பொலிசாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டால் ஆபத்தாகலாம் எனக்  கருதி தற்கொலையில் இறங்கியதாக அவரது நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறாயினும் குறித்த விடயம் இன்று யாழ் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. பிரதீபன் கடந்த சில மாதங்களாக கொழும்பை தலைமையகமாக கொண்ட ஊடகம் ஒன்றின் படப்பிடிப்பாளராக செயற்பட்டுவருகின்றார்.
இதனூடாக இவருக்கு ஏற்பட்ட ஊடக உறவுகள் மேற்படி இருட்டடிப்பு காரணமாக அமைவதாக உணரமுடிகின்றது. தற்போது இவர் கைது செய்யபட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் சில ஊடகவியலாளர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவர முயற்சிக்கின்றபோதும்  யாழ் ஊடக அமையத்தினரின் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

No comments:

Post a Comment