March 14, 2015

“இந்தியப் பிரதமரே எங்கள் காணாமல் போன உறவுகளை மீட்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்” யாழில் கவன ஈர்ப்பு போராட்டம்!

 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இன்றைய யாழ் வருகையை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை  காணாமல் போனவர்களின் உறவுகளினாஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்   இன்றைய யாழ்
வருகையைல் மௌனப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் பிற்பகல் யாழ் பொது நூலகத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து நல்லதொரு  தீர்வை பெற்றுத் தரவேண்டும் என்று காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். ஆர்ப்பாட்ட நிறைவில் ஏற்பாட்டுக் குழுவினரால் பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிக்க வேண்டி மகஐர் ஒன்றும் இந்திய துணைத்தூதரக அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. அந்த மகஐரில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன. போரின் போது சரணடைந்தவர்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் காணமல் போனவர்கள் தொடர்பாக  தகுந்த பதில் வேண்டும், யுத்தம் தொடர்பாக தகுந்த பதில் எமக்கு வேண்டும்.               யுத்தம் காரணமாக  இடம்பெயர்ந்த  மக்களை  அவர்களின்  சொந்த  இடத்தில் குடியமர்த்த  வேண்டும்,  இழுவைப்    படகுகளினால்  பாதிக்கப்பட்ட மீனவர்களிற்கு   நிவாரணம்   வழங்கப்பட  வேண்டும் என்று கூறி யாழ் மத்திய பேரூந்து  நிலையத்திலிருந்து   காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகிய  இப்போராட்டம்   இந்திய  துணைத்தூதரகத்தைச் சென்று  மகஐர்  கையளிப்புடன் நிறைவடைந்தது. DSCN0628                இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  ஆதரவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராச கஜேந்திரன் மற்றும் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் உட்பட காணாமல் போனவர்களின் உறவுகள் பொது அமைப்புகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.DSCN0616
    
DSCN0656

DSCN0656

DSCN0615

No comments:

Post a Comment