March 14, 2015

சுவாமி அறையில் செருப்புடன் மோடி! ஒதுக்கப்பட்ட கூட்டமைப்பு பிரபலங்கள்!

தன்னை இந்துத்துவ ஏகபிரதிநிதியாக காட்டிக்கொள்ளும் மோடி தெற்கில் இடம்பெற்ற பௌத்த துறவிகளுடனான சந்திப்பில் பாதணிகளை கழற்றி மரியாதை செலுத்தினார். ஆனால் யாழிலோ சுவாமி அறை என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அறையினுள் பாதணியுடன் புகுந்து கொண்டார்.



அதே போன்றே அரச பிரமுகர்களிற்கு முன்னுரிமை அளித்த மோடி கூட்டமைப்பினரையும் படை அதிகாரிகளையும் ஓரே தராசில் வைத்து பின்தள்ளியிருந்தார். வெறும் வேடிக்கை பார்க்கும் நபர்களாக கூட்டமைப்பு பிரபலங்கள் அமர்ந்திருந்தன.
இதேவேளை வடக்கு முதலமைச்சருடன் தனிப்பட்ட சந்திப்பினை மோடி நடத்திய வேளை பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் டெல்லி ஊடகங்களிற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் வடக்கு மற்றும் தெற்கு ஊடகங்களிற்கும் அதே போன்று தமிழக ஊடகங்களிற்கும் தடைவிதிக்கப்பட்டுமிருந்தது. இதனால் ஊடகவியலாளர்களிடையே கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.



No comments:

Post a Comment