நள்ளிரவில் டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி (வீடியோ)!
நாள் அரசு முறை பயணமாக இந்திய பெருங்கடல் நாடுகளான
சீசெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி நள்ளிரவில் தலைநகர் டெல்லி திரும்பினார்.
முதலில் சீசெல்ஸ் சென்ற மோடி அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி 4 முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அந்நாட்டில் இந்திய-சீசெல்ஸ் கூட்டணியில் உருவான ரேடாரையும் பிரதமர் மோடி இயக்கிவைத்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மொரீஷியஸ் சென்ற அவர், அந்நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
அதன்பின் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கை சென்றடைந்த அவருக்கு கொழும்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் நிலையில் மீனவர் பிரச்சினையில் நீண்ட கால தீர்வை உருவாக்கவேண்டும் என்றும் அதற்கு சில காலங்களாகும் என்று தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழர்களின் தாயகமான யாழ்ப்பாணத்திற்கு சென்று, தமிழ் மக்களுக்காக இந்திய அரசு கட்டிக்கொடுத்த வீடுகளை ஒப்படைத்தார்.
அந்நாட்டில் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு புறப்பட்ட பிரதமர் மோடி, நள்ளிரவு மீண்டும் தலைநகர் டெல்லி திரும்பினார்.
No comments:
Post a Comment