தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி வேண்டும் என வலியுறுத்த புலம்பெயர்
தமிழ் உறவுகள் அணிதிரண்டு வலிமை சேர்க்க வேண்டும். போர்குற்ற விசாரணைகளைத் தள்ளிப்போடுவது என்னவென்றால் தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது '' ஆறின கஞ்சி பழங்கஞ்சி '' கஞ்சி பழையதாகி விடும். அந்த உத்தி தான் இது. விசாரணையைத் தள்ளிப் போட்டு வரும்போது நீதி கேட்கும் வேகம் அடங்கி விடும் என்று நினைக்கிறார்கள் என தமிழீழ ஆதரவாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் கூறியுள்ளார். பதிவு இணையத்தின் சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment