தனது மாமனாரின் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி தொடர்ச்சியான முறையில் பணம் களவெடுத்து வந்த மருமகனை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்தியுள்ளனர்.
தனது கணக்கில் இருந்து பணம் குறைவடைந்து செல்வதாக மாமனார் வங்கியில் முறையிட்டுள்ளார். வங்கி இது தொடர்பாக ஆராய்ந்த போது ஏ.ரி.எம் அட்டையில் பணம் பெறுவது அவரது மருமகன் என்பது சி.சி.ரிவி கமரா மூலம் தெரியவந்தது.
இதனையடுத்து வங்கி நிர்வாகம் பொலிசாருக்கு முறையிடவே மருமகனைப் பொலிசார் கைது செய்தனர். மாமனாரின் ஏ.ரி.எம் அட்டையை அவர் இல்லாத நேரம் அவரது பையில் இருந்து எடுத்து பணம் பெற்ற பின் திரும்பவும் அப் பையினுள்ளேயே மருமகன் அட்டையை வைத்து வந்துள்ளது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் மருமகன் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து நன்நடத்தைப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.


No comments:
Post a Comment