பல இன்னல்களுக்கு மத்தியில் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் எமது தாயகம் நோக்கிய பயணத்திற்கு உதவி புரியும் அனைவருக்கும் மிக்க நன்றிகள், மீண்டும் ஒரு நிகழ்வுடம் நாம் உங்களின் கரங்களை பற்றி நிற்கின்றோம். தாயகம் நோக்கியும் எமது போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும்
எங்களுக்கு உங்கள் உதவிகளை செய்து எமது இளையவர்களுக்கு தோல்கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எங்களுக்கு உங்கள் உதவிகளை செய்து எமது இளையவர்களுக்கு தோல்கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பினால் ஒருங்கிணைக்கப் பட்டு பத்தாவது வருடமாக நடாத்தப்படவிருக்கும் இளந்தளிர் - (ஒரு தசாப்தம்) நிகழ்விற்கு வந்து சிறப்பிற்க்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். பத்தாவது வருடமாக சிறப்பிக்கவிருக்கும் இவ் நிகழ்வானது தேசியம், தமிழ் மொழி, கலை, பண்பாடு என்பனவற்றை மையக் கருவாக கொண்டு அமைந்துள்ளது.
இத்துடன் தாயகம் மற்றும் தமிழ் சார்ந்த சிறப்பு கண் காட்சியும் ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. வளர்ந்து வரும் ஈழத்து கலைஞர்களை ஊகுவிக்கும் பொருட்டும், எமது அடையாளங்களையும் வரலாற்றையும் அடுத்து வரும் சந்ததியினர்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்வாக இளந்தளிர் அமையும்.
முற்றிலும் இளையோர்கள் மற்றும் மாணவர்களால் கையாளப்பட்டு வரும் இவ் நிகழ்வு எதிர் வரும் 28ஆம் திகதி Hatch end high school, headstone Lane, Harrow, Middlesex, HA3 6NR இல் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொண்டு சிறபிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் எதிர் பார்க்கின்றோம்.
2012 இளந்தளிர் நிகழ்விற்காக தமிழ் இளையோர் அமைப்பினால் உருவாக்கப்பட்ட பாடல்
மேலதிக மேலதிக விபரங்கள் அறிய, www.tyouk.org
No comments:
Post a Comment