சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் உருவாக்கப்படவுள்ளமைக்கு, தேசிய சுதந்திர முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் 15க்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இது தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி சிறிலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக மாறுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு துரோகம் செய்யும் வகையில், சுதந்திரகட்சி இதற்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:
Post a Comment