March 14, 2015

விடுதலைச் சுடர் சுவிஸ்‏!

12.03.2015 அன்று விடுதலைச் சுடர் சுவிஸ் நாட்டின் “Luzern” மாநிலத்திலிருந்து “Basel” மாநிலத்துக்குத் தனது பயணத்தைத் தொடர்ந்தது. 13.03.2015 அன்று பாசல் மாநிலத்தின் பாராளமன்றத்துக்கு முன்பாக தமிழீழத் தேசியக் கொடியையும், சுவிஸ் நாட்டின் தேசியக் கொடியையும் வைத்துத் துண்டுப்பிரசுரம்
சுவிஸ் வாழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையினை சுவிஸ் வாழ் மக்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.



மாலை 18.00 மணியளவில் மக்கள் சந்திப்பு நடைபெற்று முடிந்தவுடன் இரவு 20.00 மணிக்கு விடுதலைச் சுடர் “Solothurn” மாநிலத்தை வந்தடைந்தது. 14.03.15 காலை 10.00 மணிக்கு “Hotel Grünau” எனும் இடத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படும். அதன்பின் விடுதலைச் சுடரின் பயணம் “Bern” மாநிலத்தைச் சென்றடையும். “Bern” பாராளமன்றம் முன்பாக மாலை 14.00 மணியிலிருந்து 17.00 மணிவரை துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படும். 15ம் திகதி “Lausanne” மாநிலத்தையும், 16ம் திகதி “Geneva” மாநிலத்தையும் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.













No comments:

Post a Comment