இவ்கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியப் பிரதமரே உங்கள் வரவு எங்கள் வாழ்விற்க்கு ஒளி ஏற்றுவதாக இருக்கட்டும் என தேசிய மீனவ பேரவை இயக்கத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடுசெய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில்
கலந்துகொண்டவர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் தெரிவித்தனர்.வடக்கிற்கான இந்திய பிரதமரின் வருகை இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் 9.45 மணியளவில் மத்திய
பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய மக்கள் அத்துமீறும் மீனவர் பிரச்சினைஇ காணாமல் போனோர் பற்றிய விசாரணையைவலியுறுத்தல், உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள காணி விடுவிப்பு தொடர்பான விடயங்களை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment