March 22, 2015

யாழ்.நகரில் மோதல்! கலகம் அடக்கும் பொலிஸ் குவிப்பு ( படங்கள் இணைப்பு)!

யாழ்ப்பாணம் நவீன சந்தைப் பகுதியில் வர்த்தக
நிலையங்களை நடத்திவரும் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி இன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நவீன சந்தைக் கட்டடத்தில் கடையின் முன்னால் உள்ள பொது மக்களின் நடை பாதையில் பொருள்களை இறக்கிவைத்தாக கூறி யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அந்தப் பொருள்களை எடுத்து சென்றனர்.

யாழ்ப்பாணம் நவீன சந்தைப் பகுதியில் வர்த்தக நிலையங்களை நடத்திவரும் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி இன்று பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நவீன சந்தைக் கட்டடத்தில் கடையின் முன்னால் உள்ள பொது மக்களின் நடை பாதையில் பொருள்களை இறக்கிவைத்தாக கூறி யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அந்தப் பொருள்களை எடுத்து சென்றனர்.


அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய கடையையும் சீல் வைத்து மூடியுள்ளனர். மாநகர சபையின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையிலும் சீல் வைத்த கடையை திறக்கக் கோரியும் இன்று காலை நவீன சந்தைப் பகுதியில் கடைகளை திறக்காது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வர்த்கர்களுக்கும் நவீன சந்தைப் பகுதியில் கடமையாற்றும் சிற்றூழியர்களுக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் கைகலப்பு ஏற்படும் நிலைக்குச் சென்றது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து வர்த்தகர்களால் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

நிலைமையை பொலிஸார் சமாளிக்க முற்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையில் முறுகல் நிலை தொடர்ந்ததால் கலகம் அடக்கும் பொலிஸார் உடனடியாக குறிப்பிட்ட இடத்திற்கு அழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வட மாகாண சபையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் ஆகியோர் தலைமையில் பொலிஸாரும் இணைந்து இரு பகுதியினருடனும் பேச்சுக்களை நடத்தி இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து கடைகள் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment