வெலிகடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற
நீதியசரசர் விமல் நம்புவாசம் தலைமையில், அசோக வியஜதிலக்க (ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர்), ஓய்வு பெற்ற நிர்வாக உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.கே.லியனே ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இக்குழு, இச்சம்பவம் தொடர்பிலான ஆதாரங்கள் அல்லது ஏதேனும் தகவல்களை பொதுமக்கள் வழங்கு முன்வருவார்களாயின், அதனை வரவேற்பதாக, நீதி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இக்குழுவின் அலுவலகம் இல.35ஏ, டாக்டர். என்.எம் பெரேரா மாவத்தை, கொழும்பு 08 என்ற முகவரியிலுள்ள கட்டடத்தின் நான்காம் மாடியில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த முகவரிக்கு கடிதம் மூலமாகவோ அல்லது 011-2697908, 011-2699812 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொண்டு வெலிகடை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களையும் ஆராதங்களையும் சமர்ப்பிக்க முடியும். தகவல்களை தருபவர்களின் இரகசியத் தன்மை பேணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment