இனஅழிப்பு தொடர்பாக வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முழு அளவில் வரவேற்றுள்ளது. அத்துடன் இதே நிலைப்பாட்டுடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டமைப்பு செயற்படுமாயின் தமது கட்சி கூட்டமைப்பிற்கு முழுமையான ஆதரவினை வழங்க தயாராக இருப்பதாகவும் முன்னணி அறிவித்துள்ளது.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் 2009 மேயின் பின்னராக ஜெனீவாவிலும் சர்வதேச சமூகத்தின் முன்னதாகவும் நாம் எதனை வலியறுத்தி போராடியிருந்தோமோ அதனையே இப்போது வடமாகாணசபை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
அதனை கொண்டுவந்த வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களிற்கு எமது நன்றிகள்.
ஆனாலும் கூட்டமைப்புடன் கடந்த காலங்களில் இணைந்து செயற்பட்ட அனுபவங்களின் பிரகாரம் இது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிற்கான முன்னேற்பாடாவென்ற சந்தேககங்களும் எமக்குள்ளது. ஏனெனில் இத்தகைய பிரேரணையொன்றை கொண்டுவர கடந்த இருதடவைகள் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்றிருக்கவில்லை.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் பங்கெடுத்தன் மூலம் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் தமிழ் மக்களால் வெறுக்கப்படுபவர்களாகியுள்ளனர்.
இவர்கள் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் பங்கெடுக்க அமெரிக்க மற்றும் இந்திய அழுத்தமென சிலர் விளக்கமளித்துவருகின்றனர்.
இத்தகைய தரப்புக்கள் எல்லாவற்றினையும் புறந்தள்ளி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்றவர்கள் தாம் கொண்டுவந்த பிரேரணை அடிப்படையில் கூட்டமைப்பினை முன்நகர்த்துவார்களேயானால் அவர்களிற்கு ஆதரவளித்து செயற்பட தாம் தாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment