February 1, 2015

ஈழ அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா தோல்வி கண்டுள்ளது � மனித உரிமைகள் காண்காணிப்பகம்!

ஈழ அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா முறையாக செயற்பட தவறிவிட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. மன்னிப்பு சபையில் உலக மனித உரிமைகள் அறிக்கையில்
இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 157 ஒரு மாத காலத்துக்கும் அதிகமாக கடலில் கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் கைது செய்யப்படும் போது, படகுகளின் மூலம் திரும்பவும் இந்தியாவுக்கே செல்லுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

அதேநேரம் சர்வதேச சட்டங்களை மீறி அவுஸ்திரேலிய அரசாங்கம் அகதிகளுக்காக நாட்டுக்கு வெளியே நவுரு மற்றும் பப்புவா நியுகினியில் அகதி முகாம்களை நடத்தி வருகிறது.

இந்த விடயங்கள் அனைத்து கண்டனத்துக்குரியவை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment