சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்கும் சட்டத்தை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
.மேலும் இரண்டு ஆண்டு காலத்திற்கு இந்த சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிடிவிராந்து உத்தரவின்றி சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்கும் நடைமுறையை நீடிக்க அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது எனக் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கம் இந்த சட்டத்தை நீடித்தால், அது நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மிக மோசமாக பாதிக்கும் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் டொக்டர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு 2ம் இலக்க குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சந்தேக நபர்கள் பிடிவிராந்து உத்தரவின்றி 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சட்டம் இரண்டு ஆண்டு காலத்திற்கு மட்டும் அமுல்படுத்தப்படக் கூடிய வகையில் கடந்த 2013ம் ஆண்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது என மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்ட உடன் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட வேண்டுமெனவும், இ;வ்வாறு 48 மணித்தியாலங்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யாது தடுத்து வைப்பது பரிந்துரைகளுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய சட்டம் இந்தவாரத்தில் காலவாதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் சட்டத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க முயற்சிப்பதாகவும், அது நாட்டின் மனித உரிமை நிலைமைகளை மிகவும் மோசமாக பாதிக்கும் எனவும் மஹானமஹேவா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment