August 23, 2014

தமிழின அழிப்பை உறுதிப்படுத்துவோம் – யேர்மன் தமிழ் மக்களுக்கான அவசர அறிவித்தல்!

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமையகம் எடுத்துள்ள போர்க்குற்ற, இனவழிப்பு விசாரணையானது எமது விடுதலையைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பணியாற்றுவோம்.

சாட்சியாளரின் விபரங்கள் யாவிலும் இரகசியம் பேணப்பட்டு அத்தோடு தாயகம், இந்தியாவிலுள்ள உறவினர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் உறுதிப்படுத்தி சாட்சிகளை ஆவணப்படுத்தும் வகையில் அனைத்து வேலைத்திட்டங்களும் நம்பிக்கையோடும் ரகசியமாகவும் முன்னெடுக்கப்படும்.அத்தோடு சாட்சியாளர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகளும் வழங்கப்படும் .
அத்தோடு சர்வதேச மனிதவுரிமை அமைப்பான ECCHR (European Center for Constitutional and Human Rights e.V. ) நிறுவனத்தின் மனிதவுரிமை சார்ந்த நிபுணர்களின் மற்றும் சட்டவல்லுனர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
சாட்சிகள் பலவகையாகப் வரையறுக்கப்படும் :
புலம்பெயர்தேசத்தில் வசிக்கையில் தகவல் கேள்வியுற்றோர் (உறவினர், இணையத்தளம், தொலைக்காட்சி, வானொலி, …),
2002-2011 காலப்பகுதியில் தாயகத்தில் நேரடியாக இழப்புக்குள்ளானவர், அல்லது பாதிப்பைப் பாரத்தவர்,
நேரடியாகக் காயப்பட்டவர்,
கைது செய்யப்பட்டவர், சித்திரவதைக்குள்ளானவர், சிறையிலடைக்கப்பட்டவர்,
பாலியல் துன்புறுத்தல், பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்,
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ( போராளிகள், நிர்வாகத்துறை, நீதித்துறை, காவல்துறை, … )தாயகத்தில் அனைத்துலக விதிகளையும மனிதநேய அடிப்படை விதிகளையும் மதித்து தற்காப்பு யுத்தம் செய்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டமைப்பற்றிக் கூறல்.
கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலை அமைப்பின் உறுப்பினர்களின் உறவினர்களின் சாட்சிகள்,
இராணுவ ஆக்கிரமிப்பால் நிலம், சொத்துக்களை இழந்தவர்களின் சாட்சிகள்,
போன்றனவற்றை கண்கண்ட சாட்சியங்களாகவோ ஆதாரமாகவோ பதிவு செய்யலாம். இத்துடன் இனப்படுகொலைக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கலாம்.
சாட்சியாளரின் வதிவிட அடையாள அட்டைப்பிரதி, இனப்படுகொலை தொடர்பான அத்தாட்சிப்பத்திரங்கள், ஆவணங்கள், இறப்புச் சான்றிதழ், ஊடகச் செய்தி, போட்டோக்கள் போன்றவை இணைக்கப்படுதல் அவசியம்.
உங்கள் தொகுதியில், உங்கள் தொடர்பில் இருக்கும் தேசிய செயற்பாட்டாளர்களை அணுகினால் உங்களுக்கு தேவையான உதவிகளைப் புரிவார்கள். மேலதிக விபரங்களுக்கு யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை யின் தொடர்பு இலக்கமான 015127928817 ஐ அல்லது மின்னஞ்சல் முகவரி info@vetd.org ஐ தொடர்பு கொள்ளவும்.
மேற்கூறிய விடயங்களைக் கருத்திலெடுத்து விரைவாக எமது பணியை முன்னெடுப்போம்.
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி

No comments:

Post a Comment