June 3, 2014

யாழில் தனிசிங்களத்தில் எழுத்தப்பட்ட கடித்தில் கையெழுத்து பெறும் நடவடிக்கை!

யாழில் காணி சுவிகரிப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட காணிகளின்
உரிமையாளர்களிடம் தனிச் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதங்களில் கையெழுத்து பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இச் செயற்பாடானது மக்களை முழுமையாக ஏமாற்றி அவர்களுடைய காணிகளை அபகரிக்கும் நோக்கிலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றது.இச் செயற்பாடுகளுக்கு சில கிராமசேவர்களும் உடந்தடையாக இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்காக அல்வாய் திக்கம் பகுதியில் உள்ள மக்களின் 8 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்துள்ள சிறிலங்கா படையினர், அக் காணிகளை சுவிகரிக்கப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியின் கிராமசேவகரின் உதவியுடன் குறித்த காணியின் சொந்தக் காரர்களிடம் தனிச் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் வழங்கப்பட்டு அக் கடிதங்களின் கீழே காணி உரிமையாளர்களின் கையெழுத்துக்கனும் பெறப்பட்டுள்ளது.
இக் கையேழுத்தக்கள் பெறப்பட்ட பின்னரே குறித்த காணிகள் சுவிகரிக்கப்படவுள்ளதாக 2 ஆம் கட்ட அறிவித்தல் துண்டுப்பிரசுரங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை அச்சுறுத்தியும், ஏமாற்றியும் அவர்களுடைய காணிகளை சுவிகரிப்பதில் மிக மும்முரமாக செயற்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment