June 3, 2014

கூட்டமைப்பு மாகாணசபை நிர்வாகம் நாறுவதாக குற்றச்சாட்டுறது சனம்!

கூட்டமைப்பின்ர அஞ்சா நெஞ்சம் வீரச்சிங்கம் தம்பி சயந்தனின்ர பொடியள்
தங்களுக்குள்ள போட்டுப்பிடிச்சதில கனக்கப்பேருக்கு மண்டை உடைஞ்சுப்போயிட்டுது. விசயத்தை அடக்கி வாசிக்க தான் தம்பி தலையால நடந்து போராடினவர். ஆனால் விசயம் லீக் ஆயிட்டுது. ஏற்கனவே தம்பியில முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்ப வெளிக்கிட்ட குற்றச்சாட்டு இருந்தது. அதோட பிறர்மனை கவர்தலெண்ட குற்றச்சாட்டுமிருக்கு. எங்கேயென்று பார்த்துக்கொண்டிந்து ஆப்பு இறுக்கியாச்சு. இனி ஆடிப்பாருங்கோவன். 

வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்மாரை குழப்பிக்கொண்டிருக்கிறதாக மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் பற்றி பெயர் பட்டியலொன்று வெளிவந்து பேப்பர்காரர் கைகளில உலாவுது. பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் பின்கதவு எம்பியால தான் கனக்க குழப்பமெண்டால் மாகாணசபையிலயும் பின்கதவு உறுப்பினரொருத்தரான அஸ்மின் எனபவர் பற்றித்தான் கூடக்கதை அடிபடுகுது. இன நல்லிணக்கத்திற்காக சீற் கொடுத்தால் ஆள்  இப்ப கன இடங்களில கல்லு குத்திக்கொண்டு திரியிறதாக கேள்வி. ஏற்கனவே கூட்டமைப்பு மாகாணசபை நிர்வாகம் நாறுவதாக சனம் குற்றஞ்சாட்ட இப்பிடிப்பட்ட ஆட்களையும் சேர்த்து வைச்சால்  விளங்கினமாதிரித்தான். 

அரசாங்கத்தோட இருந்தாலும் ஈபிடிபிகாரர் நல்ல படியாக திட்டம்போட்டு வேலை செய்கினம் பாருங்கோ. அதுக்காக சனத்தின்ர அபிவிருத்திக்கு மினைக்கிடுறதாக நீங்கள் நம்பினால் நான் அதுக்கு பொறுப்பில்லை. கூட்டமைப்பை எப்பிடி நாறடிக்கிறதெண்டது தான அவையின்ர வேலைத்திட்டம். யாழ்ப்பாணத்தில மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடக்கிற வேளை கூட்டமைப்பு மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் தூண்டிவிட்டது அவைதானாம். பின்னுக்கு நின்று அவையளின்ர ஆக்கள் தூண்டிவிட இவங்களோ மற்றக்கதவால தப்பி ஓடியிருக்கிறாங்கள். வாக்களிச்ச சனத்திற்கு முதலில மதிப்பளிக்க பாருங்கோ. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணிகாரர் கிளிநொச்சியில நடத்தின ஆர்ப்பாட்டம் பிரபாகரனது காலடி மண்பட்ட இடத்தை மீட்க நடந்த போராட்டமெண்டு இராணுவப்பேச்சாளர் புதுவியாக்கியானம் கொடுத்திருக்கிறார். அதாவது தாங்கள் பிடிச்சு வைச்சிருக்கிற இடமெல்லாம் அவரின்ர காலடி பட்ட இடமோவெண்டு கேக்கிறன். போற போக்கில பார்த்தால் பலாலியிலயும் காங்கேசன் துறையிலும் அவர் கூட்டம் போட்டதால தான் பிடிச்சு வைச்சிருக்கிறமெண்டு புது வியாக்கியானம் செய்வினம் பாருங்கோ.

கெடுகுடி சொல் கேளாதெண்டது முதுமொழி. போற போக்கைப்பார்த்தால் முதலமைச்சரின்ர நிலையும் அப்பிடித்தான் வரும் போல. போற வாற கள்ளன் காடையன் எல்லோரையும் அணைக்கவேண்டாமென்று சொல்ல சொல்ல கேட்காமல் கூட்டி வச்சுக்கொண்டு ஆரெண்டே தெரியாத அவரை மிகப்பெரிய வெற்றி பெறவைச்சு கொண்டாடின ஊடகங்களை இப்ப புறமொதுக்க தொடங்கியிட்டார். விளைவு அவரை இப்ப பரிதாபத்திற்குரிய ஒருவராக ஊடகங்கள் சித்தரிக்க தொடங்கியிட்டுதுகள். அதிலயும் இடப்பிரச்சினையால ஊடகங்களிற்கு தடையெண்டு அவர் விளக்கம் கொடுக்க மூன்று இலட்சம் வாடகை கொடுக்கிற கட்டிடத்தில் ஒரு நிற்கிறதிற்கு ஒரு சின்ன இடம் கூட இல்லையோவெண்டு நாக்கை புடுங்குற மாதிரியெல்லோ கேள்வி கேட்கிறாங்கள்.  

ஆமிக்கு ஆள்பிடிக்க வந்து இறங்கினவை கத்தி தீர்த்தும் ஒன்றும் நடக்கிறமாதிரியில்லை. யாழ்ப்பாணத்தில முப்பதும் முல்லைதீவில 39 பேரையும் தான் ஆள்சேர்த்தவை. கடைசியில இப்ப ஆள்பிடிச்சு தரச்சொல்லி விதானைமாரிட்டை வந்து நிற்கினம். ஆளுக்கு ஒரு ஆளை பிடிச்சு தரச்சொல்லி விதானைமாருக்கு ஆமி அதிகாரிகள் ஓடர் போட்டிருக்கினமாம். அதில அரசாங்க அதிபர் சுந்தரம் ஜயாதான் இடைத்தரகரெண்டு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கூட்டமைப்பு எம்பிமார் போட்டு கிழி கிழியெண்டு கிழிச்சுப்போட்டாங்கள் பாருங்கோ. ஆள் என்ன சொல்லியதெண்டு தெரியாமல் அங்கை பேந்த பேந்த முழிக்க அங்கையும் அரச எடுபிடி அமைச்சர் டக்ளஸ் தான் காப்பாற்றினவராம். அதில ஆள்சேர்ப்பை நியாயப்படுத்தி அவற்றை கட்சிகாரர் குரலெழுப்பி தங்களை வெளிக்காட்டிப்போட்டினமாம்.  
வடக்கில அபிவிருத்தி பற்றி டக்ளஸ் தேவானந்தாவும் அவரின்ர எடுபிடியளும் நிமிசத்திற்கொருக்கா பேசிக்கொண்டிருந்தாலும் அமைச்சரின்ர ஆட்கள் பழைய படி அலுவலகங்களில் அந்த மாதிரியாக பெண்களை வேலை வாய்ப்பெண்டு கவிழ்கின்ற தொழிலில மும்முரமாக ஈடுபட்டிருக்கினமாம். அண்மையில் நடந்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில ஈபிடிபியின் பொறுப்பாளரொண்டு கத்தி தீர்த்தது பற்றி ஆராய்ந்தால் ஆள் ஒரு குடும்பஸ்தரின்ர மனைவியை தன்ரை அலுவலகத்தில மடக்கி வைச்சிருக்கிறது அம்பலமாகியிட்டுது. கணவன் போய் கட்சி அலுவலகத்தினில் போட்டு தாக்கினதாக கேள்வி. பரவலாக பெண் பிரச்சிகைள் அவையளின்ர எல்லா அலுவலகங்களிலும் அரங்கேறுவதாக தகவல். 

No comments:

Post a Comment